பாடம் : 2
தமக்குத் தாமே அநீதியிழைத்து (அழிவில் சிக்கி)க்கொண்டவர்களின் வசிப்பிடங்களுக்கு அழுதவர்களாகவே தவிர நீங்கள் செல்ல வேண்டாம்.
5700. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(தபூக் பயணத்தின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹிஜ்ர்”வாசிகள் (ஸமூத் கூட்டத்தார்) தொடர்பாக, “இறைவனால் வேதனைக்குள்ளாக்கப்பட்ட இந்த மக்களின் இடத்திற்கு அழுதவர்களாகவே தவிர நீங்கள் செல்ல வேண்டாம். உங்களால் அழ முடியாவிட்டால், அவ்விடத்திற்குச் செல்லாதீர்கள். அவர்களுக்கு ஏற்பட்டது உங்களுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது” என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
Book : 53