🔗

முஸ்லிம்: 5703

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«السَّاعِي عَلَى الْأَرْمَلَةِ وَالْمِسْكِينِ، كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللهِ – وَأَحْسِبُهُ قَالَ – وَكَالْقَائِمِ لَا يَفْتُرُ، وَكَالصَّائِمِ لَا يُفْطِرُ»


பாடம்: 3

விதவைகள், ஏழைகள், அநாதைகள் ஆகியோருக்கு உதவி புரிதல்.

5703. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவர் ஆவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


மேற்கண்ட செய்தியை மாலிக் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் மஸ்லமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர் இரவெல்லாம் சோர்ந்து விடாது நின்று வணங்கி, பகலெல்லாம் விடாது நோன்பு நோற்றவரைப் போன்றவர் ஆவார்” (என்றும் நபி-ஸல்-அவர்கள் கூறியதாக மாலிக்-ரஹ்-அவர்கள்) அறிவித்தார்கள் என்றே நான் எண்ணுகிறேன்.

அத்தியாயம்: 53