«إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ، يَنْزِلُ بِهَا فِي النَّارِ أَبْعَدَ مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ»
பாடம்: 7
ஒரே ஒரு வார்த்தைகூட நரகத்தில் தள்ளிவிடும்.
5711. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் (பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) ஒரு வார்த்தை பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம்: 53