🔗

முஸ்லிம்: 5757

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: أَلِمَنْ قَتَلَ مُؤْمِنًا مُتَعَمِّدًا مِنْ تَوْبَةٍ؟ قَالَ: لَا، قَالَ: فَتَلَوْتُ عَلَيْهِ هَذِهِ الْآيَةَ الَّتِي فِي الْفُرْقَانِ: {وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللهُ إِلَّا بِالْحَقِّ} [الفرقان: 68] إِلَى آخِرِ الْآيَةِ،

قَالَ: «هَذِهِ آيَةٌ مَكِّيَّةٌ نَسَخَتْهَا آيَةٌ مَدَنِيَّةٌ»: {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا} [النساء: 93]، وَفِي رِوَايَةِ ابْنِ هَاشِمٍ: فَتَلَوْتُ عَلَيْهِ هَذِهِ الْآيَةَ الَّتِي فِي الْفُرْقَانِ: {إِلَّا مَنْ تَابَ} [مريم: 60]


5757. ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “இறைநம்பிக்கையாளரைத் திட்டமிட்டே கொலை செய்தவனுக்குப் பாவமன்னிப்புக் கிடைக்குமா?” என்று கேட்டேன். அவர்கள், “பாவமன்னிப்புக் கிடையாது” என்று சொன்னார்கள். உடனே நான் அவர்களுக்கு “அல்ஃபுர்கான்” அத்தியாயத்திலுள்ள (அல்குர்ஆன்: 25:68, 69) ஆகிய வசனங்களை ஓதிக்காட்டினேன்.

அதற்கு அவர்கள், “இது மக்காவில் அருளப்பெற்ற வசனமாகும். இதை மதீனாவில் அருளப்பெற்ற மற்றொரு வசனம் மாற்றிவிட்டது என்று கூறிவிட்டு, “ஓர் இறை நம்பிக்கையாளரைத் திட்டமிட்டே கொலை செய்தவனுக்கு நரகம்தான் தண்டனை. அதில் அவன் நிரந்தரமாக இருப்பான்” (அல்குர்ஆன்: 4:93) எனும் இறைவசனமே அது என்று கூறினார்கள்.


இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 54