🔗

முஸ்லிம்: 933

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي، فَلَمَّا رَكَعْتُ شَبَّكْتُ أَصَابِعِي وَجَعَلْتُهُمَا بَيْنَ رُكْبَتَيَّ، فَضَرَبَ يَدَيَّ، فَلَمَّا صَلَّى قَالَ: «قَدْ كُنَّا نَفْعَلُ هَذَا، ثُمَّ أُمِرْنَا أَنْ نَرْفَعَ إِلَى الرُّكَبِ»


933. முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் என் தந்தை (சஅத் பின் அபீவக்காஸ் -ரலி) அவர்களின் விலாப் புறத்தில் தொழுதேன். நான் ருகூஉச் செய்தபோது என் விரல்களைக் கோத்து அவ்விரண்டையும் என் முழங்கால் களுக்கிடையே வைத்துக்கொண்டேன். உடனே அவர்கள் என் கைகள்மீது அடித்தார்கள். தொழுது முடித்ததும், “நாங்கள் இவ்வாறுதான் செய்துகொண்டிருந்தோம். பின்னர் முழங்கால் களுக்கு மேல் கைகளைத் தூக்கிவைக்குமாறு உத்தரவிடப்பட்டடோம்” என்று கூறினார்கள்.

Book : 5