صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَصْحَابِهِ الظُّهْرَ، قَالَ: فَدَخَلَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا حَبَسَكَ يَا فُلَانُ عَنِ الصَّلَاةِ؟» قَالَ: فَذَكَرَ شَيْئًا اعْتَلَّ بِهِ، قَالَ: فَقَامَ يُصَلِّي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ» قَالَ: فَقَامَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَصَلَّى مَعَهُ
11808. நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு லுஹர் தொழுகை நடத்தி முடித்தார்கள். அப்போது நபித்தோழர் ஒருவர் (பள்ளிக்குள்) வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “உம்மை (குறித்த நேரத்தில்) தொழ வரவிடாமல் தடுத்தது எது? என்று கேட்டார்கள். அதற்கு அவர் காரணத்தை கூறினார்.
பிறகு அவர் தனியாக தொழ நின்ற போது நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுது இவருக்குத் தர்மம் செய்பவர் யார்?” என்று கூறினார்கள். அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.
அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி)