🔗

முஸ்னது அஹ்மத்: 12170

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

مَا اسْتَجَارَ عَبْدٌ مِنَ النَّارِ ثَلَاثَ مِرَارٍ إِلَّا قَالَتِ النَّارُ: اللَّهُمَّ أَجِرْهُ مِنِّي، وَلَا يَسْأَلُ الْجَنَّةَ إِلَّا قَالَتِ الْجَنَّةُ: اللَّهُمَّ أَدْخِلْهُ إِيَّايَ


12170. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு அடியார், (அல்லாஹ்விடம்) மூன்று தடவை நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை என்னை விட்டும் காப்பாற்றுவாயாக! என்று நரகம் கூறுகிறது.

ஒரு அடியார், (அல்லாஹ்விடம்) மூன்று தடவை சொர்க்கத்தை கேட்டு பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை என்னுள் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)