«إِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً، فَهَلَكَتْ سَبْعُونَ فِرْقَةً، وَخَلَصَتْ فِرْقَةٌ وَاحِدَةٌ، وَإِنَّ أُمَّتِي سَتَفْتَرِقُ عَلَى اثْنَتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، تَهْلِكُ إِحْدَى وَسَبْعُونَ فِرْقَةً، وَتَخْلُصُ فِرْقَةٌ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، مَنْ تِلْكَ الْفِرْقَةُ؟ قَالَ: «الْجَمَاعَةُ الْجَمَاعَةُ»
12479. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனீ இஸ்ரவேலர்கள் எழுபத்தி ஒரு கூட்டமாக பிரிந்தனர். எழுபது கூட்டத்தினர் அழிந்தனர். ஒரு கூட்டத்தினர் வெற்றிபெற்றனர். என்னுடைய சமுதாயம் எழுபத்தி இரண்டு கூட்டமாக பிரிவார்கள். எழுபத்தி ஒரு கூட்டத்தினர் அழிந்து விடுவர். ஒரு கூட்டத்தினர் வெற்றிபெறுவர்.
மக்கள், அல்லாஹ்வின் தூதரே! வெற்றிபெறும் அந்த ஒரு கூட்டத்தினர் யார் எனக் கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்கள் தான் ஜமாஅத், ஜமாஅத் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)