🔗

முஸ்னது அஹ்மத்: 12648

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْبَادِيَةِ كَانَ اسْمُهُ زَاهِرًا، وَكَانَ يُهْدِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْهَدِيَّةَ مِنَ الْبَادِيَةِ، فَيُجَهِّزُهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ زَاهِرًا بَادِيَتُنَا، وَنَحْنُ حَاضِرُوهُ» . وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّهُ، وَكَانَ رَجُلًا دَمِيمًا، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَهُوَ يَبِيعُ مَتَاعَهُ، فَاحْتَضَنَهُ مِنْ خَلْفِهِ وَلَا يُبْصِرُهُ الرَّجُلُ، فَقَالَ: أَرْسِلْنِي مَنْ هَذَا، فَالْتَفَتَ فَعَرَفَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ لَا يَأْلُو مَا أَلْصَقَ ظَهْرَهُ بِصَدْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حِينَ عَرَفَهُ، وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ يَشْتَرِي الْعَبْدَ؟» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِذًا وَاللَّهِ تَجِدُنِي كَاسِدًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَكِنْ عِنْدَ اللَّهِ لَسْتَ بِكَاسِدٍ أَوْ قَالَ: «لَكِنْ عِنْدَ اللَّهِ أَنْتَ غَالٍ»


12648. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமத்தில் வசிப்பவர்களில் ஸாஹிர் எனும் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார். அவர் கிராமத்திலிருந்து வந்து நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகளை வழங்குபவராக இருந்தார். அவர் வந்து மீண்டும் (பயணம்) செல்ல விரும்பும்போது, ​​அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குப் பயண ஏற்பாட்டைச் செய்வார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நிச்சயமாக ஸாஹிர் நமக்கு கிராமவாசி. நாம் அவருக்கு நகரவாசிகள்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அவரை நேசிப்பவராக இருந்தார்கள். மேலும் அவர் அழகற்றவராக இருந்தார். ஒருநாள் அவர் தனது பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தபோது, ​​நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, பின்னால் இருந்து அவரை அணைத்துக் கொண்டார்கள். அப்போது அவர் அவர்களைப் பார்க்கவில்லை. எனவே அவர், “என்னை விடுங்கள்! நீங்கள் யார்?” என்று கேட்டுக் கொண்டே திரும்பிப் பார்த்த போது, ​​நபி (ஸல்) அவர்களை அடையாளம் கொண்டார். எனவே அவர் தனது முதுகை நபி (ஸல்) அவர்களின் மார்புடன் ஒட்டிக்கொள்வதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்த அடிமையை யார் வாங்குகிறார்கள்?” என்று கூற ஆரம்பித்தார்கள். அவர், “அல்லாஹ்வின் தூதரே! அப்படியானால் நான் ஒரு விலையில்லாதவனாக-செல்லாக்காசாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆனால் நிச்சயமாக நீ அல்லாஹ்விடம் விலையில்லாதவன் அல்ல” அல்லது “அல்லாஹ்விடம் நீ விலைமதிப்பற்றவன்” என்று கூறினார்கள்.