قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ، وَأَنَا ابْنُ تِسْعِ سِنِينَ، فَانْطَلَقَتْ بِي أُمِّي أُمُّ سُلَيْمٍ إِلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا ابْنِي اسْتَخْدِمْهُ. ” فَخَدَمْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تِسْعَ سِنِينَ، فَمَا قَالَ لِي لِشَيْءٍ فَعَلْتُهُ: لِمَ فَعَلْتَ كَذَا وَكَذَا، وَمَا قَالَ لِي لِشَيْءٍ لَمْ أَفْعَلْهُ: أَلَا فَعَلْتَ كَذَا وَكَذَا
12784. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தார்கள். என்னுடைய தாயார் உம்மு ஸுலைம் (ரலி அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் என்னை அழைத்துச் சென்று , அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! இந்த என்னுடைய மகனை பணிவிடை செய்ய வைத்துக்கொள்ளுங்கள் என கூறி என்னை ஒப்படைத்தார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். நான் செய்த எதைப் பற்றியும் “இன்னின்னதை நீ ஏன் செய்தாய்?” என்றோ, நான் செய்யாமல் விட்டுவிட்ட எதைப் பற்றியும் “நீ இன்னின்னதைச் செய்திருக்கக் கூடாதா?” என்றோ அவர்கள் என்னிடம் கூறியதில்லை.