🔗

முஸ்னது அஹ்மத்: 13295

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصِفُ مِنْ عِرْقِ النَّسَا أَلْيَةَ كَبْشٍ عَرَبِيٍّ أَسْوَدَ، لَيْسَ بِالْعَظِيمِ وَلَا بِالصَّغِيرِ، يُجَزَّأُ ثَلَاثَةَ أَجْزَاءٍ، فَيُذَابُ فَيُشْرَبُ كُلَّ يَوْمٍ جُزْءٌ»


13295. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இடுப்பு நரம்பு வலிக்கு (இசியாட்டிகா எனும் நோய்க்கு), ரொம்பப் பெரியதாகவும் இல்லாமல் சிறியதாகவும் இல்லாமல் நடுத்தர அளவிலுள்ள ஒரு கிராமப்புற கறுப்பு செம்மறி ஆட்டின் வால் கொழுப்பைப் பரிந்துரைப்பார்கள். அது மூன்று பங்குகளாகப் பிரிக்கப்பட்டு, உருக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் ஒரு பங்கு குடிக்கப்படும்.