«قُولُوا بِقَوْلِكُمْ وَلَا يَسْتَجْرِكُمُ الشَّيْطَانُ – أَوِ الشَّيَاطِينُ، إِحْدَى الْكَلِمَتَيْنِ – أَنَا مُحَمَّدٌ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، مَا أُحِبُّ أَنْ تَرْفَعُونِي فَوْقَ مَنْزِلَتِي الَّتِي أَنْزَلَنِي اللَّهُ»
13596. “ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களை பார்த்து) முஹம்மத் அவர்களே, எங்களில் சிறந்தவரே, எங்களில் சிறந்தவரின் மகனே, எங்களின் தலைவரே, எங்களின் தலைவரின் மகனே ! என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீீங்கள் கூறும் இது போன்ற வார்த்தைகளை கூறிக் கொள்ளுங்கள். ஆனால் ஷைத்தான் உங்களைக் கெடுத்து விட வேண்டாம். ( அல்லது ஷைத்தான்கள் உங்களைக் கெடுத்து விட வேண்டாம்) நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன்; மேலும் அல்லாஹ்வின் தூதருமாவேன். அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ள தகுதிக்கு மேல் என்னை நீங்கள் உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்”
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)