سَأَلْنَا عَلِيًّا، رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ صَلاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ النَّهَارِ، فَقَالَ: «إِنَّكُمْ لَا تُطِيقُونَ ذَلِكَ» قُلْنَا: مَنِ اطَاقَ مِنَّا ذَلِكَ؟ قَالَ: «إِذَا كَانَتِ الشَّمْسُ مِنْ هَاهُنَا كَهَيْئَتِهَا مِنْ هَاهُنَا عِنْدَ الْعَصْرِ صَلَّى رَكْعَتَيْنِ، وَإِذَا كَانَتِ الشَّمْسُ مِنْ هَاهُنَا كَهَيْئَتِهَا مِنْ هَاهُنَا عِنْدَ الظُّهْرِ صَلَّى أَرْبَعًا، وَيُصَلِّي قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا وَبَعْدَهَا رَكْعَتَيْنِ وَقَبْلَ الْعَصْرِ أَرْبَعًا، وَيَفْصِلُ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ بِالتَّسْلِيمِ عَلَى الْمَلائِكَةِ الْمُقَرَّبِينَ وَالنَّبِيِّينَ وَمَنْ تَبِعَهُمْ مِنَ المُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ»
1375. ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் பகல் நேர (உபரியானத்) தொழுகையைப் பற்றி நாங்கள் அலீ (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், “நீங்கள் அதைச் செய்ய முடியாது” என்றார்கள்.
நாங்கள், “எங்களில் யார் அதைச் செய்ய முடியும்?” என்று கேட்டோம்.
அதற்கு அவர்கள், “சூரியன் அஸர் நேரத்தின் போது இருக்கும் இடத்தைப் போல இந்த இடத்தில் (கிழக்கில்) இருக்கும்போது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். சூரியன் ளுஹர் நேரத்தின் போது இருக்கும் இடத்தைப் போல இந்த இடத்தில் (கிழக்கில்) இருக்கும்போது நான்கு ரக்அத்கள் தொழுதார்கள்.
மேலும், ளுஹருக்கு முன்பு நான்கு ரக்அத்களும், அதற்குப் பின்பு இரண்டு ரக்அத்களும், அஸருக்கு முன்பு நான்கு ரக்அத்களும் தொழுதார்கள். நெருக்கமான வானவர்கள், மற்றும் அவர்களை அடுத்துள்ள முஃமின்கள், முஸ்லிம்கள் அனைவரின் மீதும் ஸலாம் கூறுவதன் மூலம் அந்த நான்கு ரக்அத்களை இரண்டாக பிரிப்பார்கள்” என்று கூறினார்கள்.