🔗

முஸ்னது அஹ்மத்: 14047

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كُنَّا نَتَحَدَّثُ أَنَّهُ ” لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُمْطِرَ السَّمَاءُ، وَلَا تُنْبِتَ الْأَرْضُ، وَحَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً الْقَيِّمُ الْوَاحِدُ، وَحَتَّى إِنَّ الْمَرْأَةَ لَتَمُرُّ بِالنَّعْلِ فَتَنْظُرُ إِلَيْهَا، فَيَقُولُ : لَقَدْ كَانَ لِهَذِهِ مَرَّةً رَجُلٌ “،

ذَكَرَهُ مَرَّةً حَمَّادٌ، هَكَذَا، وَقَدْ ذَكَرَهُ عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَا يَشُكُّ فِيهِ، وَقَدْ قَالَ أَيْضًا: عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيمَا يَحْسِبُ


14047. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

வானம் மழை பொழிந்தும், பூமியில் (புற்பூண்டுகள்) எதுவும் முளைக்காத (ஒரு நிலை ஏற்படும்) வரை இறுதி நாள் வராது என்றும், (குடும்பத்தில்) ஐம்பது பெண்களுக்கு ஒரே ஆண் நிர்வாகியாக இருக்கும் நிலை ஏற்படும் வரை இறுதி நாள் வராது என்றும் ….பேசிக்கொள்வோம்.

இந்த செய்தியை ஹம்மாத் அவர்கள், ஒரு தடவை மேற்கண்டவாறே  அனஸ் (ரலி) அவர்களின் கூற்றாக அறிவித்தார். (மற்றொரு தடவை) ஸாபித் —> அனஸ் —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் சந்தேகமின்றி-மர்ஃபூவாக அறிவித்துள்ளார். அனஸ் —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் இந்த செய்தியை கூறியுள்ளார்.