أَشْرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى فَلَقٍ مِنْ أَفْلَاقِ الْحَرَّةِ، وَنَحْنُ مَعَهُ، فَقَالَ: «نِعْمَتِ الْأَرْضُ الْمَدِينَةُ، إِذَا خَرَجَ الدَّجَّالُ عَلَى كُلِّ نَقْبٍ مِنْ أَنْقَابِهَا مَلَكٌ، لَا يَدْخُلُهَا، فَإِذَا كَانَ كَذَلِكَ، رَجَفَتْ الْمَدِينَةُ بِأَهْلِهَا ثَلَاثَ رَجَفَاتٍ، لَا يَبْقَى مُنَافِقٌ، وَلَا مُنَافِقَةٌ إِلَّا خَرَجَ إِلَيْهِ، وَأَكْثَرُ – يَعْنِي – مَنْ يَخْرُجُ إِلَيْهِ النِّسَاءُ، وَذَلِكَ يَوْمُ التَّخْلِيصِ، وَذَلِكَ يَوْمَ تَنْفِي الْمَدِينَةُ الْخَبَثَ، كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ، يَكُونُ مَعَهُ سَبْعُونَ أَلْفًا مِنَ الْيَهُودِ عَلَى كُلِّ رَجُلٍ مِنْهُمْ سَاجٌ، وَسَيْفٌ مُحَلًّى، فَتُضْرَبُ رَقَبَتُهُ بِهَذَا الضَّرْبِ الَّذِي عِنْدَ مُجْتَمَعِ السُّيُولِ»
ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا كَانَتْ فِتْنَةٌ، وَلَا تَكُونُ حَتَّى تَقُومَ السَّاعَةُ، أَكْبَرَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ، وَلَا مِنْ نَبِيٍّ إِلَّا وَقَدْ حَذَّرَهُ أُمَّتَهُ، وَلَأُخْبِرَنَّكُمْ بِشَيْءٍ مَا أَخْبَرَهُ نَبِيٌّ أُمَّتَهُ قَبْلِي» ، ثُمَّ وَضَعَ يَدَهُ عَلَى عَيْنِهِ، ثُمَّ قَالَ: «أَشْهَدُ أَنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ»
14112. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ஹர்ரா பகுதியின் ஒரு கணவாயின் மீது ஏறி நின்று பார்த்தார்கள். அப்போது நாங்கள் அவர்களுடன் இருந்தோம். அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
மதீனா சிறந்த பூமியாகும். தஜ்ஜால் வரும்போது, அதன் ஒவ்வொரு நுழைவுவாயிலிலும் ஒரு வானவர் இருப்பார். அதனால் அவனால் மதீனாவிற்குள் நுழைய முடியாது. அவ்வாறு நிகழும்போது, மதீனா அதன் மக்களைக் கொண்டு மூன்று முறை அதிர்ந்து குலுங்கும். அப்போது எந்த ஒரு முனாஃபிக்-நயவஞ்சக ஆணும் அல்லது நயவஞ்சக பெண்ணும் தஜ்ஜாலிடம் செல்லாமல் இருக்க மாட்டார்கள். (மேலும்) அவனிடம் செல்பவர்களில் அதிகமானோர் பெண்களாக இருப்பார்கள். இதுவே ‘யவ்முத் தக்லீஸ்’ (தூய்மைப்படுத்தும் நாள்) ஆகும். இதுவே மதீனா அசுத்தங்களை நீக்கும் நாளாகும். உலைக்களம் இரும்பின் அசுத்தங்களை நீக்குவது போல, (மதீனா) தீயவர்களை நீக்கும்.
தஜ்ஜாலுடன் 70,000 யூதர்கள் இருப்பார்கள். அவர்களில் ஒவ்வொருவரிடமும் தஜ்ஜாலின் கொடி மற்றும் அலங்கரிக்கப்பட்ட வாள் இருக்கும். வெள்ளங்கள் சங்கமிக்கும் இடத்தில் இந்த அடியால் அவனது கழுத்து துண்டிக்கப்படும்.
பின்னர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஜ்ஜாலின் குழப்பத்தை விட பெரிய குழப்பம் வேறு ஒன்றும் இருந்ததில்லை; மறுமை நாள் வரும் வரை இருக்கப்போவதுமில்லை. எந்த ஒரு நபியும் தனது சமுதாயத்திற்கு அவனைக் குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. எனக்கு முன் எந்த நபியும் தனது சமுதாயத்திற்கு அறிவிக்காத ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். (இதற்கு பிறகு அவர்கள் தங்கள் கையை தங்கள் கண்ணின் மீது வைத்தார்கள்.)
பின்னர் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்ல என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்.