مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ، نَبَتَ لَهُ غَرْسٌ فِي الْجَنَّةِ،
وَمَنْ قَرَأَ الْقُرْآنَ فَأَكْمَلَهُ وَعَمِلَ بِمَا فِيهِ، أَلْبَسَ وَالِدَيهِ يَوْمَ الْقِيَامَةِ تَاجًا هُوَ أَحْسَنُ مِنْ ضَوْءِ الشَّمْسِ فِي بُيُوتٍ مِنْ بُيُوتِ الدُّنْيَا، لَوْ كَانَتْ فِيهِ، فَمَا ظَنُّكُمْ بِالَّذِي عَمِلَ بِهِ
15645. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைப் போற்றி துதிக்கிறேன்) என்று சொல்லக் கூடியவருக்கு அவர் புகழ்ந்ததன் காரணமாக சுவனத்தில் அவருக்காக ஒரு மரம் முளைக்கும்.
அல்குர்ஆனை முழுமையாக ஓதி அதன் படி நடந்தவரின் பெற்றோருக்கு மறுமை நாளில் ஒளியிலான ஒரு கிரீடம் அணிவிக்கப்படும். அதன் பிரகாசம் வீட்டில் இருக்கும் சூரியனின் பிரகாசத்தைப் விட சிறந்ததாக இருக்கும். (பெற்றோருக்கே இந்த கூலியென்றால்) அதன்படி நடந்தவருக்கு எத்தகைய கூலி கிடைக்கும் என்று எண்ணிப்பாருங்கள்!
அறிவிப்பவர்: முஆத் பின் அனஸ் (ரலி)