🔗

முஸ்னது அஹ்மத்: 15646

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّهُ مَرَّ عَلَى قَوْمٍ وَهُمْ وُقُوفٌ عَلَى دَوَابَّ لَهُمْ وَرَوَاحِلَ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْكَبُوهَا سَالِمَةً وَدَعُوهَا سَالِمَةً، وَلَا تَتَّخِذُوهَا كَرَاسِيَّ، لِأَحَادِيثِكُمْ فِي الطُّرُقِ، وَالْأَسْوَاقِ فَرُبَّ مَرْكُوبَةٍ خَيْرٌ مِنْ رَاكِبِهَا هِيَ أَكْثَرُ ذِكْرًا لِلَّهِ تَعَالَى مِنْهُ»


15646.

நபி (ஸல்)அவர்கள் ஒரு கூட்டத்தை கடந்து சென்றார்கள். அவர்கள் தங்கள் வாகனங்களின் (கால்நடைகள்) மீது அமர்ந்திருந்தார்கள். அப்போது நபி அவர்கள் அழகிய முறையில் உங்கள் வாகனங்களில் பயணம் செய்யுங்கள். அழகிய முறையில் அதை விட்டு விடுங்கள். பயணத்தின் இடையில் நீங்கள் பேசுவதற்காக அதை அமரும் நாற்காலிகளாக ஆக்கி விடாதீர்கள். ஏனென்றால் உங்களை விட உங்கள் வாகனங்கள் அதிகம் அல்லாஹ்வை திகர் செய்கின்றன என்று கூறினார்கள்.