🔗

முஸ்னது அஹ்மத்: 1671

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَا تَنْقَطِعُ الْهِجْرَةُ مَا دَامَ الْعَدُوُّ يُقَاتَلُ»

فَقَالَ مُعَاوِيَةُ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” إِنَّ الْهِجْرَةَ خَصْلَتَانِ: إِحْدَاهُمَا أَنْ تَهْجُرَ السَّيِّئَاتِ، وَالْأُخْرَى أَنْ تُهَاجِرَ إِلَى اللَّهِ وَرَسُولِهِ. وَلا تَنْقَطِعُ الْهِجْرَةُ مَا تُقُبِّلَتِ التَّوْبَةُ، وَلا تَزَالُ التَّوْبَةُ مَقْبُولَةً حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنَ المَغْرِبِ، فَإِذَا طَلَعَتْ طُبِعَ عَلَى كُلِّ قَلْبٍ بِمَا فِيهِ، وَكُفِيَ النَّاسُ الْعَمَلَ


1671. எதிரிகளுடன் சண்டை நடைபெறும் காலமெல்லாம் ஹிஜ்ரத் செய்வது (மார்க்கத்திற்காக நாடு துறந்து செல்வது) முடிவடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும், முஆவியா (ரலி), அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) போன்றோர் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கூறியதாவது:

ஹிஜ்ரத் இருவகையாகும். 1. பாவங்களை விடுவது. 2. அல்லாஹ்விற்காகவும், அல்லாஹ்வின் தூதருக்காகவும் நாடு துறந்து செல்வது.

பாவமன்னிப்புக்கான அவகாசம் முடிவடையாதவரை ஹிஜ்ரத் முடிவடையாது. சூரியன் மேற்கிலிருந்து உதிக்காதவரை (அதாவது யுகமுடிவு நாள் வரையில்) பாவமன்னிப்பு முடிவடையாது. சூரியன் மேற்கில் உதயமாகும் போது ஒவ்வொரு மனிதரின் உள்ளமும் (ஏற்கனவே இருந்த நிலையில்) முத்திரையிடப்பட்டுவிடும். மக்கள் (புதிய) அமல்கள் செய்வதை விட்டு தடுக்கப்படுவர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் குதாமா (ரலி)