أَنَّهُمْ حَضَرُوا غُضَيْفَ بْنَ الْحَارِثِ الثُّمَالِيَّ، حِينَ اشْتَدَّ سَوْقُهُ، فَقَالَ: «هَلْ مِنْكُمْ أَحَدٌ يَقْرَأُ يس؟» قَالَ: فَقَرَأَهَا صَالِحُ بْنُ شُرَيْحٍ السَّكُونِيُّ، فَلَمَّا بَلَغَ أَرْبَعِينَ مِنْهَا قُبِضَ، قَالَ: وَكَانَ الْمَشْيَخَةُ يَقُولُونَ: إِذَا قُرِئَتْ عِنْدَ الْمَيِّتِ خُفِّفَ عَنْهُ بِهَا قَالَ صَفْوَانُ: «وَقَرَأَهَا عِيسَى بْنُ الْمُعْتَمِرِ عِنْدَ ابْنِ مَعْبَدٍ»
16969. ஃகுளைஃப் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களின் மரணவேளையில் அவர்களை சந்தித்த என்னுடைய சில ஆசிரியர்கள் கூறியதாவது:
ஃகுளைஃப் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களுக்கு மரணவேதனை கடுமையானபோது அவர்கள், உங்களில் யாராவது யாஸீன் அத்தியாயத்தை (இப்போது) ஓதமுடியுமா? என்று கேட்டார்கள். அப்போது ஸாலிஹ் பின் ஷுரைஹ் (ரஹ்) அதை ஓதினார். நாற்பது வசனங்களை ஓதி முடித்திருந்தபோது ஃகுளைஃப் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களின் உயிர் கைப்பற்றப்பட்டது.
அதனால் தான், மரணத்தை நெருங்கியவர்களிடம் யாஸீன் அத்தியாயம் ஓதப்பட்டால் அவரின் மரணவேதனை இலேசாக்கப்படும் என அந்த ஆசிரியர்கள் கூறினர்.
இப்னு மஃபத் மரணதருவாயில் இருக்கும் போது, அவரிடத்தில் ஈஸா பின் முஃதமிர் யாஸீன் அத்தியாயத்தை ஓதினார்.
அறிவிப்பவர் : ஸஃப்வான் பின் அம்ர் (ரஹ்)