🔗

முஸ்னது அஹ்மத்: 16976

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

تَغَدَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَعَنَا أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ، قَالَ: فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، هَلْ أَحَدٌ خَيْرٌ مِنَّا؟ أَسْلَمْنَا مَعَكَ وَجَاهَدْنَا مَعَكَ، قَالَ: «نَعَمْ، قَوْمٌ يَكُونُونَ مِنْ بَعْدِكُمْ يُؤْمِنُونَ بِي وَلَمْ يَرَوْنِي»


16976. அபூஜுமுஆ-ஹபீப் பின் ஸிபாஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உணவு உண்டோம். எங்களுடன் அபூஉபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அப்போது அபூஉபைதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களை விடச் சிறந்தவர்கள் வேறு யாரேனும் இருப்பார்களா? நாங்கள் தங்களுடன் இணைந்து இஸ்லாமைத் தழுவினோம், தங்களுடன் இணைந்தே ஜிஹாதும் செய்தோம்” என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்! உங்களுக்குப் பின்னால் வரக்கூடிய ஒரு சமுதாயம். அவர்கள் என்னைப் பார்க்காமலேயே என் மீது நம்பிக்கை கொள்வார்கள்” என்று கூறினார்கள்.