أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ إِلَيْهِ رَهْطٌ، فَبَايَعَ تِسْعَةً وَأَمْسَكَ عَنْ وَاحِدٍ، فَقَالُوا: يَا رَسُولَ اللهِ، بَايَعْتَ تِسْعَةً وَتَرَكْتَ هَذَا؟ قَالَ: ” إِنَّ عَلَيْهِ تَمِيمَةً ” فَأَدْخَلَ يَدَهُ فَقَطَعَهَا، فَبَايَعَهُ، وَقَالَ: ” مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ
17422. உக்பா பின்ஆமிர் (ரலி) கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பத்து பேர் கொண்ட) ஒரு குழுவினர் வந்தபோது, ஒன்பது நபர்களிடம் வாக்குறுதிப் பிரமாணம் வாங்கி கொண்டு ஒருவரிடம் வாங்கவில்லை. அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே!, இவரை மட்டும் ஏன் விட்டுவிட்டீர்கள்? என கேட்க, “அவர் தாயத் அணிந்து உள்ளார்” என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், தனது கையால் அதை அறுத்தெரிந்து விட்டு அவரிடம் வாக்குறுதிப் பிரமாணம் வாங்கினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “யார் தாயத்தைத் தொங்க விடுகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்” என்று கூறினார்கள்.