يَأْتِي الشُّهَدَاءُ وَالْمُتَوَفَّوْنَ بِالطَّاعُونِ، فَيَقُولُ أَصْحَابُ الطَّاعُونِ: نَحْنُ شُهَدَاءُ، فَيُقَالُ: انْظُرُوا، فَإِنْ كَانَتْ جِرَاحُهُمْ كَجِرَاحِ الشُّهَدَاءِ تَسِيلُ دَمًا رِيحَ الْمِسْكِ، فَهُمْ شُهَدَاءُ فَيَجِدُونَهُمْ كَذَلِكَ
17651. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில்) உயிர்த்தியாகிகளும், பிளேக் நோயால் இறந்தவர்களும் வருவார்கள். அப்போது பிளேக் நோயால் இறந்தவர்கள் நாங்களும் (போரில் வீரமரணமடைந்த) உயிர்த்தியாகிகள் தான் என்று கூறுவர்.
அப்போது, இவர்களின் காயங்களைப் பாருங்கள். அவை (போரில் வீரமரணமடைந்த) உயிர்த்தியாகிகளின் காயங்களைப் போன்று கஸ்தூரி வாசனைமிக்க இரத்தம் ஓடிக்கொண்டிருந்தால் அவர்களும் (போரில் வீரமரணமடைந்த) உயிர்த்தியாகிகள் (போன்று) தான் என்று கூறப்படும்.
(அவைகளைப் பார்த்தால்) அவர்களின் இரத்தம், கஸ்தூரி வாசனை மிக்கதாக ஓடுவதை காண்பார்கள்.
அறிவிப்பவர்: உத்பா பின் அப்த் அஸ்ஸுலமீ (ரலி)