🔗

முஸ்னது அஹ்மத்: 17734

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّهُ سَمِعَهُ يَقُولُ وَهُوَ بِالْفُسْطَاطِ فِي خِلَافَةِ مُعَاوِيَةَ، وَكَانَ مُعَاوِيَةُ أَغْزَى النَّاسَ الْقُسْطَنْطِينِيَّةَ، فَقَالَ: «وَاللَّهِ لَا تَعْجِزُ هَذِهِ الْأُمَّةُ مِنْ نِصْفِ يَوْمٍ إِذَا رَأَيْتَ الشَّامَ مَائِدَةَ رَجُلٍ وَاحِدٍ وَأَهْلِ بَيْتِهِ، فَعِنْدَ ذَلِكَ فَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ»


17734. அபூஸஃலபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில், கான்ஸ்டாண்டிநோபிளில் வசிக்கும் மக்களிடம் அவர்கள் போரிட்ட சமயத்தில் கூடாரத்தில் (நாங்கள்) இருந்த போது “இந்த சமுதாயம் (மறுமை நாளின் அளவில்) பாதி நாளைக் கடக்காமல் அழிந்துவிடாது.

(யுகமுடிவு நாளின் நெருக்கத்தில்) ஷாம் நாட்டினர் ஒரு மனிதரின் தலைமையிலும், அவரின் குடும்பத்தின் தலைமையிலும் ஒன்றுப்படுவதை நீ கண்டால் கான்ஸ்டாண்டிநோபிள் வெற்றிக்கொள்ளப்படும் என்று முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள்.