🔗

முஸ்னது அஹ்மத்: 18548

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

لَقِيتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ، فَسَلَّمَ عَلَيَّ، وَأَخَذَ بِيَدِي، وَضَحِكَ فِي وَجْهِي، قَالَ: تَدْرِي لِمَ فَعَلْتُ هَذَا بِكَ؟ قَالَ: قُلْتُ: لَا أَدْرِي، وَلَكِنْ لَا أَرَاكَ فَعَلْتَهُ، إِلَّا لِخَيْرٍ، قَالَ: إِنَّهُ لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَفَعَلَ بِي مِثْلَ الَّذِي فَعَلْتُ بِكَ، فَسَأَلَنِي، فَقُلْتُ مِثْلَ الَّذِي قُلْتَ لِي، فَقَالَ: «مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ، فَيُسَلِّمُ أَحَدُهُمَا عَلَى صَاحِبِهِ، وَيَأْخُذُ بِيَدِهِ، لَا يَأْخُذُهُ إِلَّا لِلَّهِ عَزَّ وَجَلَّ فَيَتَفَرَّقَانِ حَتَّى يُغْفَرَ لَهُمَا»


18548. நுபைஃ பின் ஹாரிஸ் கூறுகிறார் :

நான் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் எனக்கு சலாம் சொல்லி எனது கையைப் பிடித்து என் முகத்தைப் பார்த்து சிரித்தார்கள். உங்களிடத்தில் நான் ஏன் இவ்வாறு செய்தேன் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் எனக்குத் தெரியாது. என்றாலும் நீங்கள் ஒரு நன்மைக்காகவே இதை செய்திருப்பீர்கள் என நான் கருதுகிறேன் என்று சொன்னேன்.

அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தபோது நான் உன்னிடத்தில் நடந்துகொண்டவாறு அவர்கள் என்னிடத்தில் நடந்துகொண்டார்கள். மேலும் (இது பற்றி நான் ஏன் இவ்வாறு செய்தேன் தெரியுமா?) என்று கேட்டார்கள். நான் நீங்கள் என்னிடத்தில் கூறியவாறே அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள் இரண்டு முஸ்லிம்கள் சந்திக்கும் போது அவர்களில் ஒருவர் தனது தோழருக்கு சலாம் கூறி அவருடைய கையைப் பிடித்தால் அல்லாஹ்விற்காகவே இவ்வாறு செய்தால் அவ்விருவரின் பாவங்களும் மன்னிக்கப்படாமல் அவ்விருவரும் பிரிந்து செல்வதில்லை என்று கூறினார்கள்.