دَخَلْنَا عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ وَهُوَ مَرِيضٌ نَعُودُهُ فَقِيلَ لَهُ: لَوْ تَعَلَّقْتَ شَيْئًا، فَقَالَ: أَتَعَلَّقُ شَيْئًا، وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ»
18781. ஈஸா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உகைம் (ரலி) அவர்கள் நோயுற்றபோது அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். நீங்கள் தாயத் (போன்ற) ஏதாவது அணிந்துக்கொள்ளலாமே என்று அவர்களிடம் கூறப்பட்டது.
அதற்கு அவர்கள், யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்) என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்க நான் எப்படி அணியமுடியும்? என்று கூறினார்கள்.