🔗

முஸ்னது அஹ்மத்: 18967

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

مَرَّ رَجُلٌ فِي مَسْجِدِ حِمْصَ، فَقَالُوا: هَذَا خَادِمُ النَّبِيِّ، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَقُمْتُ إِلَيْهِ، فَقُلْتُ: حَدِّثْنِي حَدِيثًا سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَا يَتَدَاوَلُهُ بَيْنَكَ وَبَيْنَهُ الرِّجَالُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَقُولُ حِينَ يُصْبِحُ وَحِينَ يُمْسِي ثَلَاثَ مَرَّاتٍ: رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا، إِلَّا كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُرْضِيَهُ يَوْمَ الْقِيَامَةِ


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணியாளரான ஒருவரின் ஹதீஸ்

18967. அபூஸல்லாம்-மம்தூர் அல்அஸ்வத் அவர்கள் கூறியதாவது:

நான் ஹிம்ஸ் நகர பள்ளிவாசலில் இருக்கும் போது ஒரு மனிதர் பள்ளியைக் கடந்து சென்றார். அப்போது மக்கள், “(இதோ) இவர் தான் நபி (ஸல்) அவர்களின் பணியாளராக இருந்தவர் என்று கூறினர். உடனே நான் எழுந்து சென்று அவரிடம், “உங்களுக்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் வேறு அறிவிப்பாளர் இல்லாமல் நீங்கள் நேரடியாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட ஹதீஸை எனக்கு அறிவியுங்கள் என்று கூறினேன்.

அப்போது அவர்கள், “ஒரு முஸ்லிமான அடியார் காலையிலும், மாலையிலும், “ரளீத்து பில்லாஹி ரப்பா; வபில் இஸ்லாமி தீனா; வபி முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபிய்யா” என மூன்றுத் தடவைக் கூறினால் மறுமை நாளில் அவரைப் பொருந்திக் கொள்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிடுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அறிவித்தார்.

(பொருள்: அல்லாஹ்வை இறைவனாகவும்; இஸ்லாத்தை மார்க்கமாகவும்; முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்.)