إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ لَمْ يَبْقَ مُؤْمِنٌ إِلَّا أُتِيَ بِيَهُودِيٍّ أَوْ نَصْرَانِيٍّ حَتَّى يُدْفَعَ إِلَيْهِ. يُقَالُ لَهُ: هَذَا فِدَاؤُكَ مِنَ النَّارِ “
قَالَ أَبُو بُرْدَةَ فَاسْتَحْلَفَنِي عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ: أَسَمِعْتَ أَبَا مُوسَى يَذْكُرُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: قُلْتُ: نَعَمْ. فَسُرَّ بِذَلِكَ عُمَرُ
19600. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் ஒவ்வொரு இறைநம்பிக்கையாளருடன் ஒரு யூதரையோ அல்லது கிறித்தவரையோ கொண்டு வந்து பிறகு இறைநம்பிக்கையாளரிடம் அவரை ஒப்படைத்து, “இவர்தான் உனக்கு பதிலாக நரகில் இருப்பார்” என்று சொல்லப்படும்.
அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)
அபூபுர்தா (ரஹ்) கூறுகிறார்:
இந்த செய்தியை நான் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், வணக்கத்திற்குரியவன் யாரைத் தவிர வேறு யாருமில்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதை உம்முடைய தந்தை (அபூமூஸா (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதாக உம்மிடம் கூறினார்களா?” என்று மூன்று முறை கேட்டார்கள். நான், அவ்வாறே சத்தியமிட்டுக் கூறினேன். அதனால் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.