🔗

முஸ்னது அஹ்மத்: 20285

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَتَّقِ اللَّهَ، وَلْيُكْرِمْ جَارَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلْيَتَّقِ اللَّهَ، وَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلْيَتَّقِ اللَّهَ، وَلْيَقُلْ حَقًّا، أَوْ لِيَسْكُتْ»


20285.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்போர் அல்லாஹ்வை பயந்து தனது அண்டைவீட்டானிடத்தில் கண்ணியமாக நடந்துகொள்ளட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வை பயந்து தனது விருந்தினரை கண்ணியமாக நடத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வை பயந்து நல்லதையே சொல்லட்டும். அல்லது அமைதியாக இருக்கட்டும்.
அறிவிப்பவர் : சில நபித்தோழர்கள்,