«غُمَّ عَلَيْنَا هِلَالُ شَوَّالٍ، فَأَصْبَحْنَا صِيَامًا، فَجَاءَ رَكْبٌ مِنْ آخِرِ النَّهَارِ، فَشَهِدُوا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُمْ رَأَوْا الْهِلَالَ بِالْأَمْسِ، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُفْطِرُوا مِنْ يَوْمِهِمْ، وَأَنْ يَخْرُجُوا لِعِيدِهِمْ مِنَ الْغَدِ»
20584. அபூஉமைர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எனது தந்தையின் உடன்பிறந்த (சில) அன்ஸாரீ நபித்தோழர்கள் எனக்கு அறிவித்தனர்:
மேகம் காரணமாக எங்களுக்கு ஷவ்வால் பிறை தெரியவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக காலைப் பொழுதை அடைந்தோம். அப்போது ஒரு வாகனக் கூட்டத்தினர் பகலின் இறுதியில் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினர்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (எங்களது) நோன்பை விடுமாறும் (எங்களது) தொழும் திடலுக்கு (நாங்கள்) மறுநாள் செல்லுமாறும் கட்டளையிட்டார்கள்.