أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا قَوْمٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ، فَعَلِّمْنَا شَيْئًا يَنْفَعُنَا اللَّهُ بِهِ، قَالَ: «لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا، وَلَوْ أَنْ تُفْرِغَ مِنْ دَلْوِكَ فِي إِنَاءِ الْمُسْتَسْقِي، وَلَوْ أَنْ تُكَلِّمَ أَخَاكَ وَوَجْهُكَ إِلَيْهِ مُنْبَسِطٌ، وَإِيَّاكَ وَتَسْبِيلَ الْإِزَارِ، فَإِنَّهُ مِنَ الْخُيَلَاءِ، وَالْخُيَلَاءُ لَا يُحِبُّهَا اللَّهُ وَإِنْ امْرُؤٌ سَبَّكَ بِمَا يَعْلَمُ فِيكَ، فَلَا تَسُبَّهُ بِمَا تَعْلَمُ فِيهِ، فَإِنَّ أَجْرَهُ لَكَ، وَوَبَالَهُ عَلَى مَنْ قَالَهُ»
20633.
…அபூஜுரை (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் கிராமப்புறவாசிகளில் ஒரு கூட்டத்தினர் ஆவோம். எனவே, அல்லாஹ் எங்களுக்குப் பயன் தரும் ஒரு சில விஷயங்களை எங்களுக்குக் கற்றுத் தாருங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
“நல்லறங்களில் எதனையும் நீங்கள் அற்பமாகக் கருதாதீர்கள். உங்களிடம் தண்ணீர் கேட்கும் ஒருவரின் பாத்திரத்தில் உங்கள் வாளியிலிருந்து ஒரு கை அளவு ஊற்றுவதானாலும் சரியே! அல்லது உங்கள் சகோதரருடன் முகம் மலர்ந்து பேசினாலும் சரியே! (அதையும் நீங்கள் செய்யுங்கள்.)
உங்கள் கீழாடையைத் தரையில் இழுபடும்படி ஆக்குவதைக் குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், அது பெருமையின் காரணமாகச் செய்யப்படுவதாகும். பெருமையை அல்லாஹ் விரும்பமாட்டான்.
ஓர் ஆள், உன்னில் அவன் அறிந்திருக்கும் குறையைச் சொல்லி உன்னை ஏசினால், நீ அவனில் அறிந்திருக்கும் குறையைச் சொல்லி அவனை ஏசாதே. ஏனெனில், அதன் நன்மை உனக்குரியதாகும்; அதன் பாவம் அதைச் சொன்னவனுக்குரியதாகும்.”