🔗

முஸ்னது அஹ்மத்: 20746

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَتَيْنَا عَلَى رَجُلٍ مِنْ أَهْلِ الْبَادِيَةِ، فَقَالَ الْبَدَوِيُّ: أَخَذَ بِيَدِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ يُعَلِّمُنِي مِمَّا عَلَّمَهُ اللَّهُ، فَكَانَ فِيمَا حَفِظْتُ عَنْهُ أَنْ قَالَ: «إِنَّكَ لَنْ تَدَعَ شَيْئًا اتِّقَاءً لِلَّهِ، إِلَّا آتَاكَ اللَّهُ خَيْرًا مِنْهُ»


பாடம்:

ஒரு கிராமவாசியின் ஹதீஸ்.

20746. அபூகதாதா (ரஹ்), அபுத்தஹ்மா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:

(ஒரு தடவை) நாங்கள் ஒரு கிராமவாசியிடம் சென்றபோது அவர் கூறினார்:

(ஒரு தடவை) நபி (ஸல்) அவர்கள், எனது கையைப் பிடித்து அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்ததிலிருந்து எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அவர்களிடமிருந்து நான் மனனமிட்ட செய்திகளில் ஒன்று, “நீ அல்லாஹ்வுக்கு பயந்து எதையேனும் விட்டுவிட்டால் அதை விடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் உனக்கு வழங்குவான்” என்பதாகும்.


இந்தச் செய்தியை அறிவிக்கும் அஃப்பான் அவர்களின் அறிவிப்பில் அபூகதாதா (ரஹ்), அபுத்தஹ்மா (ரஹ்) ஆகியோர் அதிகம் ஹஜ் செய்பவர்களாக இருந்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது.