«لَا يَزَالُ هَذَا الْأَمْرُ عَزِيزًا مَنِيعًا، يُنْصَرُونَ عَلَى مَنْ نَاوَأَهُمْ عَلَيْهِ إِلَى اثْنَيْ عَشَرَ خَلِيفَةً» ، ثُمَّ قَالَ كَلِمَةً أَصَمَّنِيهَا النَّاسُ، فَقُلْتُ لِأَبِي: مَا قَالَ؟ قَالَ: «كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ»
20926. ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “இந்த மார்க்கம், பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வரை வலிமையானதாகவும் பாதுகாப்போடும் இருந்துவரும். (இந்த மார்க்கத்தை பின்பற்றுவோருக்கு) அவர்களை விரோதம் கொள்வோருக்கு எதிராக உதவி செய்யப்படும்” என்று கூறினார்கள்.
பிறகு ஏதோ சொன்னார்கள். மக்கள் (பேசிக் கொண்டிருந்ததால்) அதைக் கேட்கவிடாமல் என்னைச் செவிடாக்கி விட்டார்கள். எனவே, நான் என் தந்தையிடம், “நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டேன். அதற்கு என் தந்தை “அவர்கள் (அதாவது அந்த பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள்) அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சொன்னார்கள்.