كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَغَيْرُ الدَّجَّالِ أَخْوَفُنِي عَلَى أُمَّتِي» قَالَهَا ثَلَاثًا. قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا هَذَا الَّذِي غَيْرُ الدَّجَّالِ أَخْوَفُكَ عَلَى أُمَّتِكَ؟ قَالَ: «أَئِمَّةً مُضِلِّينَ»
21296. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றுக் கொண்டிருந்தேன். அப்போது அவர்கள், “எனது சமுதாயத்தின் விசயத்தில் தஜ்ஜால் அல்லாதவர்களும் என்னை அதிகம் பயம்கொள்ளச் செய்கின்றனர் என மூன்று தடவைக் கூறினார்கள்.
அதற்கு நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! உங்கள் சமுதாயத்தின் விசயத்தில் உங்களை அதிகம் பயம்கொள்ளச் செய்த தஜ்ஜால் அல்லாதவர்கள் யார்? என்றுக் கேட்டேன். அதற்கவர்கள், “வழிகெடுக்கும் தலைவர்கள் தான்” என்று பதிலளித்தார்கள்.