قَالَ لِي زَيْدُ بْنُ ثَابِتٍ: أَلَمْ أَرَكَ اللَّيْلَةَ خَفَّفْتَ الْقِرَاءَةَ فِي سَجْدَتَيِ الْمَغْرِبِ؟ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنْ «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَقْرَأُ فِيهِمَا بِطُولَى الطُّولَيَيْنِ»
21633. மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:
(மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நீங்கள் சென்ற இரவின் மஃக்ரிப் தொழுகையின் இரண்டு ரக்அத்களிலும் மிகச் சிறிய அத்தியாயங்களையே ஓதுவதை கண்டேன்.
எனது உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையின் இரண்டு ரக்அத்களிலும் நீளமான மிகப் பெரிய அத்தியாயங்கள் இரண்டை ஓதுவார்கள் என்று கூறினார்கள்.