كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَكُلَّمَا أَعْيَا بَعْضُ الْقَوْمِ أَلْقَى عَلَيَّ سَيْفَهُ وَتُرْسَهُ وَرُمْحَهُ، حَتَّى حَمَلْتُ مِنْ ذَلِكَ شَيْئًا كَثِيرًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتَ سَفِينَةُ»
21925. ஸஃபீனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். கூட்டத்தில் சிலர் களைப்படையும் போது வாளையும், கேடயத்தையும், ஈட்டியையும் என்னிடம் தந்துவிடுவார்கள். இறுதியில் அதிகமான பொருட்களை நான் சுமந்து வர ஆரம்பித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “நீ ஸஃபீனா (கப்பல்) என்று கூறினார்கள்.