🔗

முஸ்னது அஹ்மத்: 22642

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«أَسْوَأُ النَّاسِ سَرِقَةً الَّذِي يَسْرِقُ مِنْ صَلَاتِهِ» . قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ يَسْرِقُ مِنْ صَلَاتِهِ؟ قَالَ: «لَا يُتِمُّ رُكُوعَهَا وَلَا سُجُودَهَا»

أَوْ قَالَ: «لَا يُقِيمُ صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ»


22642. “திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு “தனது ருகூவையும், ஸுஜூதையும் முழுமையாகச் செய்யாதவனே அந்தத் திருடன்” (என்றோ) அல்லது ருகூவிலும், ஸுஜூதிலும் தமது முதுகுத் தண்டை (வளைவின்றி) நேராக ஆக்காதவனே அந்தத் திருடன்” (என்றோ) நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)