🔗

முஸ்னது அஹ்மத்: 22882

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«رَأَيْتُ الْخَاتَمَ الَّذِي بَيْنَ كَتِفَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَرَجُلٍ، قَالَ بِإِصْبَعِهِ الثَّالِثَةِ هَكَذَا، فَمَسَحْتُهُ بِيَدِي»


22882. அபூஸைத்-அம்ர் பின் அக்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் இரு தோள்புஜங்களுக்கிடையில் நபித்துவ முத்திரையை (ஒரு மனிதர் ஆச்சரியமாக பார்ப்பது போன்று) நான் பார்த்தேன். மேலும் அதை எனது கையால் தொட்டும் பார்த்தேன்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூநஹீக் கூறுகிறார்:

அபூஸைத் (ரலி) அவர்கள் இதைக் கூறும்போது தனது மூன்றாவது விரலால் இவ்வாறு (தொட்டுப்பார்த்தேன்) என்று செய்துக் காட்டினார்கள்.