🔗

முஸ்னது அஹ்மத்: 23489

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«يَا أَيُّهَا النَّاسُ، أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ، وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ، أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى عَجَمِيٍّ، وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ، وَلَا أَحْمَرَ عَلَى أَسْوَدَ، وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ، إِلَّا بِالتَّقْوَى أَبَلَّغْتُ» ، قَالُوا: بَلَّغَ رَسُولُ اللَّهِ،

ثُمَّ قَالَ: «أَيُّ يَوْمٍ هَذَا؟» ، قَالُوا: يَوْمٌ حَرَامٌ، ثُمَّ قَالَ: «أَيُّ شَهْرٍ هَذَا؟» ، قَالُوا: شَهْرٌ حَرَامٌ، قَالَ: ثُمَّ قَالَ: «أَيُّ بَلَدٍ هَذَا؟» ، قَالُوا بَلَدٌ حَرَامٌ، قَالَ: «فَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ بَيْنَكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ» ـ قَالَ: وَلَا أَدْرِي قَالَ: أَوْ أَعْرَاضَكُمْ، أَمْ لَا ـ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا أَبَلَّغْتُ “، قَالُوا: بَلَّغَ رَسُولُ اللَّهِ، قَالَ: «لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ»


23489. நபி (ஸல்) அவர்கள் அய்யாமுத் தஷ்ரீக் நாளின் உரையில் கூறியதாவது:

மக்களே! உங்கள் இரட்கன் ஒருவனே. உங்கள் தந்தையும் ஒருவரே. ஒரு அரபிக்கு அரபி அல்லாதவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு அரபி அல்லாதவனுக்கு அரபியை விட எந்தச் சிறப்பும் இல்லை.

ஒரு சிகப்பு நிறத்தவனுக்கு கருப்பு நிறத்தவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு கருப்பு நிறத்தவனுக்கு சிகப்பு நிறத்தவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. இறையச்சத்தைக் கொண்டே தவிர.

நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டேனா? என நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு எடுத்துரைத்து விட்டார் எனக் கூறினர்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், “இது எந்த நாள்?” என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “புனித நாள்” எனக் கூறினர். பிறகு “இது எந்த மாதம்?” என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “புனித மாதம்” எனக் கூறினர். பிறகு அவர்கள் “இது எந்த நகரம்?” என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “புனித நகரம்” எனக் கூறினர்.

அப்போது, “உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவுக்குப் புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், மானத்தையும் அல்லாஹ் புனிதமாக ஆக்கியுள்ளான். நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டேனா? என நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு எடுத்துரைத்து விட்டார் எனக் கூறினர்.

(இதை) இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

இதை அய்யாமுத் தஷ்ரீக் நாளில் நபி (ஸல்) அவர்களின் உரையை செவியேற்ற ஒருவர் அறிவித்தார்.

அறிவிப்பவர்: அபூநள்ரா (ரஹ்)

(இதன் அறிவிப்பாளர்களில்—ஒருவர் மானத்தை பற்றி கூறினார்களா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்..)