🔗

முஸ்னது அஹ்மத்: 23628

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَنِي عَبْدِ الْأَشْهَلِ فَصَلَّى بِهِمُ الْمَغْرِبَ فَلَمَّا سَلَّمَ قَالَ: «ارْكَعُوا هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ فِي بُيُوتِكُمْ»


23628. மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பனூ அப்துல்அஷ்ஹல் குலத்தாரின் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது அவர்களுக்கு ‘மஃக்ரிப்’ தொழுகை தொழவைத்தார்கள். அவர்கள், ஸலாம் கூறி தொழுகையை நிறைவு செய்தபோது, “மஃக்ரிப் தொழுகையின் பின் சுன்னத் இரண்டு ரக்அத் தொழுகையை உங்கள் வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆஸிம் பின் உமர் (ரஹ்)

அபூஅப்துர்ரஹ்மான்-அப்துல்லாஹ் பின் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) கூறுகிறார்:

நான், எனது தந்தை (அஹ்மத் பின் ஹம்பல்) அவர்களிடம், மஃக்ரிப் தொழுகையின் பின் சுன்னத் இரண்டு ரக்அத் தொழுகையை பள்ளிவாசலில் தொழக்கூடாது. வீட்டில் தான் தொழவேண்டும்; அதற்கு காரணம் நபி (ஸல்) அவர்கள், “இவை வீட்டில் தொழவேண்டிய தொழுகைகள்” என்று கூறினார்கள் என்று ஒரு மனிதர் கூறியதை குறிப்பிட்டு விளக்கம் கேட்டேன். அதற்கவர்கள், எந்த மனிதர் அப்படி கூறினார்? என்று கேட்டார்கள். அதற்கு நான், “முஹம்மது பின் அப்துர்ரஹ்மான்” என்று கூறினேன். அதற்கு என் தந்தை, அவர் கூறியது எவ்வளவு அழகான விளக்கமாக உள்ளது! என்றோ அல்லது அவர் எவ்வளவு அழகாக வித்தியாசப்படுத்திக் கூறியுள்ளார்! என்றோ (பாராட்டிக்) கூறினார்கள்.