«إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ الْأَصْغَرُ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَا الشِّرْكُ الْأَصْغَرُ؟ قَالَ: «الرِّيَاءُ» إِنَّ اللَّهَ يَقُولُ: «يَوْمَ تُجَازَى الْعِبَادُ بِأَعْمَالِهِمْ اذْهَبُوا إِلَى الَّذِينَ كُنْتُمْ تُرَاءُونَ بِأَعْمَالِكُمْ فِي الدُّنْيَا، فَانْظُرُوا هَلْ تَجِدُونَ عِنْدَهُمْ جَزَاءً»
23636. “உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுவதெல்லாம் சிறிய இணை வைப்பைத் தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அதற்கு நபித்தோழர்கள்) “சிறிய இணைவைப்பு என்றால் என்ன? அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டார்கள். “அது, (ஒரு நல்லறத்தைப் பிறருக்கு காட்ட வேண்டுமென) முகஸ்துதிக்குச் செய்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.
மேலும், “மனிதர்களுக்கு கூலிகள் வழங்கப்படும் மறுமை நாளில் (முகஸ்திக்காக அமல் செய்த) நபர்களிடம், பூமியில் யாருக்கு காட்டுவதற்காக அமல் செய்தீர்களோ அவர்களிடம் சென்று, நீங்கள் கூலியை பெறுவீர்களா? கவனியுங்கள் என அல்லாஹ் கூறுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மஹ்மூத் பின் லபீத் (ரலி)