🔗

முஸ்னது அஹ்மத்: 24215

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي بَعْضِ صَلَاتِهِ: «اللَّهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرًا» فَلَمَّا انْصَرَفَ، قُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، مَا الْحِسَابُ الْيَسِيرُ؟ قَالَ: «أَنْ يَنْظُرَ فِي كِتَابِهِ فَيَتَجَاوَزَ عَنْهُ، إِنَّهُ مَنْ نُوقِشَ الْحِسَابَ يَوْمَئِذٍ يَا عَائِشَةُ هَلَكَ، وَكُلُّ مَا يُصِيبُ الْمُؤْمِنَ، يُكَفِّرُ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِ عَنْهُ، حَتَّى الشَّوْكَةُ تَشُوكُهُ»


24215. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தங்களது சில தொழுகையில், “அல்லாஹும்ம ஹாஸிப்னீ ஹிஸாபன் யஸீரா” (அல்லாஹ்வே! என்னை எளிய முறையில் விசாரணை செய்!) என்று பிரார்த்திப்பதைக் கேட்டேன்.

அவர்கள் தொழுது முடித்ததும், “அல்லாஹ்வின் தூதரே! எளிய முறையில் விசாரிப்பது என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், “அல்லாஹ் தனது அடியானின் செயலேட்டைப் பார்த்து, அவனது குற்றங்களை மன்னித்து விடுவதாகும். ஏனெனில், ஆயிஷாவே! அந்நாளில் எவரிடம் கணக்கு நுணுக்கமாக விசாரிக்கப்படுகிறதோ அவர் அழிந்துவிடுவார்.

மேலும், முஃமினுக்கு ஏற்படும் துன்பங்கள் — அவனது உடலில் தைக்கும் ஒரு முள் உட்பட — அனைத்தின் மூலமாகவும் அல்லாஹ் அவனது பாவங்களைப் பரிகாரமாக ஆக்குகிறான்” என்று கூறினார்கள்.