أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي الْمَسْجِدِ، فَقَالَ لِلْجَارِيَةِ: «نَاوِلِينِي الْخُمْرَةَ» ، قَالَتْ: أَرَادَ أَنْ يَبْسُطَهَا، فَيُصَلِّيَ عَلَيْهَا، قَالَتْ: إِنَّهَا حَائِضٌ، قَالَ: «إِنَّ حَيْضَهَا لَيْسَ فِي يَدِهَا»
24747. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃபில்) இருந்துகொண்டு தொழுகை விரிப்பில் தொழ விரும்பி, அடிமைப் பெண்ணிடம் (அறையிலுள்ள) தொழுகை விரிப்பை எடு! என்று சொன்னார்கள். அதற்கு நான், அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், மாதவிடாய் என்பது அவளது கையில் (ஒட்டிக்கொண்டிருப்பது) இல்லை என்று கூறினார்கள்.