كُنْتُ أَدْخُلُ بَيْتِي الَّذِي دُفِنَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي فَأَضَعُ ثَوْبِي، وَأَقُولُ إِنَّمَا هُوَ زَوْجِي وَأَبِي، فَلَمَّا دُفِنَ عُمَرُ مَعَهُمْ فَوَاللَّهِ مَا دَخَلْتُهُ إِلَّا وَأَنَا مَشْدُودَةٌ عَلَيَّ ثِيَابِي، حَيَاءً مِنْ عُمَرَ
25660. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் எனது தந்தையும் (அபூபக்கர் – ரலி) அடக்கம் செய்யப்பட்ட எனது வீட்டிற்குள் நான் (இதற்கு முன்பு) ஆடையைக் கழற்றி வைத்துவிட்டுச் செல்வேன்; ‘இவர் எனது கணவர்தான்; இவர் எனது தந்தேர்தான்’ என்று கூறுவேன். ஆனால், அவர்களுடன் உமர் (ரலி) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பிறகு, அல்லாஹ்வின் மீது ஆணையாக, உமர் மீதுள்ள வெட்கத்தின் காரணமாக ஆடையை (உடலுடன் சேர்த்து) இறுக்கிக் கட்டிக் கொண்டே நான் அதில் நுழைவேன்.