🔗

முஸ்னது அஹ்மத்: 25821

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي سُجُودِ الْقُرْآنِ بِاللَّيْلِ يَقُولُهُ فِي السَّجْدَةِ مِرَارًا «سَجَدَ وَجْهِيَ لِلَّذِي خَلَقَهُ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ»


25821. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் ‘ஸஜ்தா’ வசனங்களை ஓதி சிரம்பணியும்போது, “ஸஜத வஜ்ஹீ லில்லதீ கலக்கஹூ, வஷக்க ஸம்அஹூ வ பஸரஹூ பி ஹவ்லிஹீ வ குவ்வத்திஹீ” என்று பல முறை கூறுவார்கள்.