🔗

முஸ்னது அஹ்மத்: 26409

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

أَنَّهُ بَلَغَهَا أَنَّ ابْنَ عُمَرَ يُحَدِّثُ عَنْ أَبِيهِ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ» ، فَقَالَتْ: يَرْحَمُ اللَّهُ عُمَرَ، وَابْنَ عُمَرَ، فَوَاللَّهِ مَا هُمَا بِكَاذِبَيْنِ وَلَا مُكَذَّبَيْنِ وَلَا مُتَزَيِّدَيْنِ، إِنَّمَا قَالَ ذَلِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَجُلٍ مِنَ الْيَهُودِ، وَمَرَّ بِأَهْلِهِ وَهُمْ يَبْكُونَ عَلَيْهِ، فَقَالَ: «إِنَّهُمْ لَيَبْكُونَ عَلَيْهِ وَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَيُعَذِّبُهُ فِي قَبْرِهِ»


26409. குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தகவல் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு கிடைத்தது. அப்போது அவர்கள், அல்லாஹ் உமருக்கும், இப்னு உமருக்கும் கிருபை செய்வானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவ்விருவரும் பொய்யுரைப்பவர்களுமல்ல; பொய்பிக்கப்படுபவர்களும் அல்ல; (ஹதீஸ்களில்) கூடுதல் செய்பவர்களுமல்ல. (நடந்தது இதுதான்:)  ஒரு யூதரின் மரணத்திற்காக அவரின் குடும்பத்தினர் அழுது கொண்டிருக்கும் போது அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடந்துசென்றார்கள். அப்போது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர்கள் இவருக்காக அழுகின்றனர். இவரோ தனது சவக்குழியில் வேதனை செய்யப்படுகிறார்” என்று கூறினார்கள் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: காஸிம் பின் முஹம்மத் (ரஹ்)