🔗

முஸ்னது அஹ்மத்: 2647

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كُنَّا نَقُولُ وَنَحْنُ صِبْيَانٌ: الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ، يَقِيءُ، ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ، وَلَمْ نَعْلَمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَرَبَ فِي ذَلِكَ مَثَلًا، حَتَّى حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَقِيءُ، ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ»


2647. தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது, “தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான்” என்று (பழமொழியாகக்) கூறுவோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதை உதாரணமாகக் கூறினார்கள் என்று அப்போது எங்களுக்குத் தெரியாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான்” என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவிக்கும்போதே இதைப் பற்றி தெரிந்துக்கொண்டோம்.