🔗

முஸ்னது அஹ்மத்: 26508

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَ فِي بَيْتِهَا، فَأَتَتْهُ فَاطِمَةُ بِبُرْمَةٍ، فِيهَا خَزِيرَةٌ، فَدَخَلَتْ بِهَا عَلَيْهِ، فَقَالَ لَهَا: «ادْعِي زَوْجَكِ وَابْنَيْكِ» قَالَتْ: فَجَاءَ عَلِيٌّ، وَالْحُسَيْنُ، وَالْحَسَنُ، فَدَخَلُوا عَلَيْهِ، فَجَلَسُوا يَأْكُلُونَ مِنْ تِلْكَ الْخَزِيرَةِ، وَهُوَ عَلَى مَنَامَةٍ لَهُ عَلَى دُكَّانٍ تَحْتَهُ كِسَاءٌ خَيْبَرِيٌّ. قَالَتْ: وَأَنَا أُصَلِّي فِي الْحُجْرَةِ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ هَذِهِ الْآيَةَ: {إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا} [الأحزاب: 33] قَالَتْ: فَأَخَذَ فَضْلَ الْكِسَاءِ، فَغَشَّاهُمْ بِهِ، ثُمَّ أَخْرَجَ يَدَهُ، فَأَلْوَى بِهَا إِلَى السَّمَاءِ، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ هَؤُلَاءِ أَهْلُ بَيْتِي وَخَاصَّتِي، فَأَذْهِبْ عَنْهُمُ الرِّجْسَ، وَطَهِّرْهُمْ تَطْهِيرًا، اللَّهُمَّ هَؤُلَاءِ أَهْلُ بَيْتِي وَخَاصَّتِي، فَأَذْهِبْ عَنْهُمُ الرِّجْسَ، وَطَهِّرْهُمْ تَطْهِيرًا» قَالَتْ: فَأَدْخَلْتُ رَأْسِي الْبَيْتَ، فَقُلْتُ: وَأَنَا مَعَكُمْ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِنَّكِ إِلَى خَيْرٍ، إِنَّكِ إِلَى خَيْرٍ»

قَالَ عَبْدُ الْمَلِكِ، وَحَدَّثَنِي أَبُو لَيْلَى، عَنْ أُمِّ سَلَمَةَ، مِثْلَ حَدِيثِ عَطَاءٍ، سَوَاءً

قَالَ: عَبْدُ الْمَلِكِ، وَحَدَّثَنِي دَاوُدُ بْنُ أَبِي عَوْفٍ أَبُو الْجَحَّافِ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أُمِّ سَلَمَةَ بِمِثْلِهِ سَوَاءً


26508. உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எனது வீட்டில் இருந்தபோது ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் ‘கஸீரா’ (எனும் இறைச்சி மற்றும் மாவினால் செய்யப்பட்ட உணவு)வைக் கொண்டு வந்தார்கள். அதனுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது, “உன்னுடைய கணவரையும் உனது இரு மகன்களையும் அழைத்து வா” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அலீ (ரலி), ஹுஸைன் (ரலி), ஹஸன் (ரலி) ஆகியோர் வந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அந்த உணவை உண்ண அமர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கைபரி ரகப் போர்வையின் மீது அமர்ந்திருந்தார்கள்.

(உம்மு ஸலமா (ரலி) கூறுகிறார்கள்:) “நான் அறையில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:

‘(நபியின்) வீட்டிலுள்ளவர்களே! உங்களை விட்டு அசுத்தங்களை நீக்கி உங்களை முற்றிலும் தூய்மைப்படுத்தவே அல்லாஹ் நாடுகிறான்.’ (அல்குர்ஆன்: 33:33)

உடனே நபி (ஸல்) அவர்கள் போர்வையின் எஞ்சிய பகுதியை எடுத்து அவர்களைப் போர்த்தினார்கள். பிறகு தனது கையை உயர்த்தி, ‘அல்லாஹ்வே! இவர்கள் எனது குடும்பத்தார்; எனக்கு நெருக்கமானவர்கள். எனவே இவர்களிடமிருந்து அசுத்தத்தை நீக்கி இவர்களை முற்றிலும் தூய்மைப்படுத்துவாயாக! அல்லாஹ்வே! இவர்கள் எனது குடும்பத்தார்; எனக்கு நெருக்கமானவர்கள். இவர்களிடமிருந்து அசுத்தத்தை நீக்கி இவர்களை முற்றிலும் தூய்மைப்படுத்துவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.

(உம்மு ஸலமா (ரலி) கூறுகிறார்கள்:) அப்போது நான் எனது தலையை அறைக்குள் நீட்டி, ‘அல்லாஹ்வின் தூதரே! நானும் அவர்களுடன் இருக்கிறேனா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நீ நன்மையை நோக்கியே இருக்கிறாய், நீ நன்மையை நோக்கியே இருக்கிறாய் (உனது நிலையும் சிறப்பானது தான்)’ என்று கூறினார்கள்.


இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்மலிக் பின் மைஸரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:

அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்களின் ஹதீஸைப் போன்றே அபூலைலா-ஸலமா பின் முஆவியா (ரஹ்) அவர்களும் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள்.

இவ்வாறே தாவூத் பின் அபூஅவ்ஃப் அவர்களும் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் —> உம்மு ஸலமா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் எனக்கு அறிவித்தார்கள்.