جَاءَ رَجُلَانِ مِنَ الْأَنْصَارِ يَخْتَصِمَانِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَوَارِيثَ بَيْنَهُمَا قَدْ دُرِسَتْ، لَيْسَ بَيْنَهُمَا بَيِّنَةٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّكُمْ تَخْتَصِمُونَ إِلَيَّ، وَإِنَّمَا أَنَا بَشَرٌ، وَلَعَلَّ بَعْضَكُمْ أَلْحَنُ بِحُجَّتِهِ، أَوْ قَدْ قَالَ: لِحُجَّتِهِ، مِنْ بَعْضٍ، فَإِنِّمَا أَقْضِي بَيْنَكُمْ عَلَى نَحْوِ مَا أَسْمَعُ، فَمَنْ قَضَيْتُ لَهُ مِنْ حَقِّ أَخِيهِ شَيْئًا، فَلَا يَأْخُذْهُ، فَإِنَّمَا أَقْطَعُ لَهُ قِطْعَةً مِنَ النَّارِ يَأْتِي بِهَا إِسْطَامًا فِي عُنُقِهِ يَوْمَ الْقِيَامَةِ “. فَبَكَى الرَّجُلَانِ، وَقَالَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا: حَقِّي لِأَخِي، قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِذْ قُلْتُمَا، فَاذْهَبَا فَاقْتَسِمَا، ثُمَّ تَوَخَّيَا الْحَقَّ، ثُمَّ اسْتَهِمَا، ثُمَّ لِيَحْلِلْ كُلُّ وَاحِدٍ مِنْكُمَا صَاحِبَهُ»
26717. உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்ஸாரிகளில் இரு நபித்தோழர்கள் காலப்போக்கில் மறைந்துபோன, எந்த ஒரு வெளிப்படையான ஆதாரமும் இல்லாத பாகப்பிரிவினை குறித்து வழக்காடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக நீங்கள் என்னிடத்தில் வழக்காட வருகிறீர்கள். நான் ஒரு மனிதன் தான். (வழக்காடும்) உங்களில் ஒருவருக்கு, மற்றொருவரை விட, தமது ஆதாரத்தை எடுத்துரைக்கும் ஆற்றல் அதிகமாக இருக்கலாம்” – அல்லது “(தமது) வாதத்தில் திறமையுள்ளவராக இருக்கலாம்.
நான் உங்களுக்கு மத்தியில் நான் கேட்டதின் அடிப்படையிலேயே தீர்ப்பளிக்கிறேன். ஆகவே, எவருடைய சகோதரனுக்குச் சொந்தமானதில் எதையேனும் அவருக்கு நான் தீர்ப்பளித்துவிட்டால், அவர் அதனை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், நான் அவருக்கு நரகத்தின் ஒரு பகுதியைத்தான் வெட்டியெடுத்துக் கொடுக்கிறேன். மறுமை நாளில் அவர் அதனைத் தன் கழுத்தில் மாட்டிக் கொண்டு வருவார்.
இதைக் கேட்டு அந்த இரு அன்ஸாரி நபித் தோழர்களும் அழுதார்கள். அவர்களில் ஒவ்வொருவரும், “என் சகோதரருக்கே என் உரிமையை விட்டுக்கொடுக்கிறேன்” என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சரி! நீங்கள் இருவரும் இவ்வாறுக் கூறிவிட்டீர்கள் என்றால், நீங்கள் இருவரும் சென்று (சொத்தை) பங்கிட்டுக்கொள்ளுங்கள். பிறகு, நீதியைப் பேணுங்கள். பிறகு (தேவைப்பட்டால்) சீட்டு குலுக்கிப் போடுங்கள். பிறகு, உங்களில் ஒருவர் மற்றவரை மன்னித்து (திருப்திப்படுத்திக்) கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.