🔗

முஸ்னது அஹ்மத்: 26764

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

لَمَّا نَزَلَ بِعَنْبَسَةَ بْنَ أَبِي سُفْيَانَ، الْمَوْتُ اشْتَدَّ جَزَعُهُ، فَقِيلَ لَهُ: مَا هَذَا الْجَزَعُ؟ قَالَ: أَمَا إِنِّي سَمِعْتُ أُمَّ حَبِيبَةَ، يَعْنِي أُخْتَهُ، تَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ، وَأَرْبَعًا بَعْدَهَا، حَرَّمَ اللَّهُ لَحْمَهُ عَلَى النَّارِ» . فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ


26764. ஹஸ்ஸான் பின் அத்திய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அன்பஸா பின் அபூஸுஃப்யான் (ரஹ்) அவர்களுக்கு மரணம் நெருங்கியபோது மிகவும் பதட்டமாக காணப்பட்டார். இந்த பதட்டம் ஏன்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டபோது,

“லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுதுவருபவரின் உடலை, அல்லாஹ்  நரகத்திற்கு தடைசெய்து விடுகிறான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக எனது சகோதரி உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றதிலிருந்து அவைகளை நான் விடவில்லை. (தற்போது விடவேண்டியது ஏற்பட்டுள்ளதே என்பதால் பதட்டமாக உள்ளேன்) என்று கூறினார்.