🔗

முஸ்னது அஹ்மத்: 27408

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

كَانَتْ تَحْتَ عُبَيْدِ اللَّهِ بْنِ جَحْشٍ، وَكَانَ أَتَى النَّجَاشِيَّ ـ وَقَالَ عَلِيُّ بْنُ إِسْحَاقَ: وَكَانَ رَحَلَ إِلَى النَّجَاشِيِّ ـ فَمَاتَ، وَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَ أُمَّ حَبِيبَةَ وَإِنَّهَا بِأَرْضِ الْحَبَشَةِ، زَوَّجَهَا إِيَّاهُ النَّجَاشِيُّ وَمَهَرَهَا أَرْبَعَةَ آلَافٍ، ثُمَّ جَهَّزَهَا مِنْ عِنْدِهِ، وَبَعَثَ بِهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ شُرَحْبِيلَ ابْنِ حَسَنَةَ، وَجِهَازُهَا كُلُّهُ مِنْ عِنْدِ النَّجَاشِيِّ، وَلَمْ يُرْسِلْ إِلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ، وَكَانَ مُهُورُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَ مِائَةِ دِرْهَمٍ


27408. உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உபைதுல்லாஹ் பின் ஜஹ்ஷ் என்பவருக்கு வாழ்க்கைப் பட்டிருந்தேன். அவர் (என்னுடன்) நஜ்ஜாஷி மன்னர் ஆட்சிசெய்து கொண்டிருந்த அபீசீனியாவிற்கு சென்றிருந்தார்… அங்கு அவர் இறந்துவிடவே நஜ்ஜாஷி மன்னர் என்னை நபி (ஸல்) அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். மேலும் நபி (ஸல்) அவர்கள் சார்பில் எனக்கு நானூறு தீனார்களை மஹராக கொடுத்தார். என்னை நபி (ஸல்) அவர்களிடம் ஒப்படைப்பதற்காக என்னுடைய பயணத்திற்காக ஏற்பாடு செய்து  ஷுரஹ்பீல் பின் ஹஸனா என்பவருடன் என்னை அனுப்பிவைத்தார். என்னுடைய பயணத்திற்கான செலவு அனைத்தும் நஜ்ஜாஷி மன்னரே செய்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்காக எதையும் அனுப்பி வைக்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு வழங்கப்படும் மஹர்தொகை நானூறு தீனாராக இருந்தது.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)

….